போக்குவரத்து விதிகளை மீறிய மாணவர்கள்: தட்டிக்கேட்ட காவலர் மீது தாக்குதல்

NEWS 7 TAMIL  NEWS 7 TAMIL
போக்குவரத்து விதிகளை மீறிய மாணவர்கள்: தட்டிக்கேட்ட காவலர் மீது தாக்குதல்

தெலுங்கானாவில் போக்குவரத்து விதிகளை மீறியது பற்றி கேள்வி கேட்ட போலீசாரை இரண்டு மாணவர்கள் தாக்கிய பரபரப்புக் வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளது. 

தெலுங்கானா மாநிலத்தின் ரங்கா ரெட்டி மாவட்டத்தில் இருசக்கர வாகனத்தில் வந்த ஆண் மாணவர் மற்றும் பெண் மாணவி போக்குவரத்து விதிகளை மீறியதாக கூறப்படுகிறது. 

அப்போது அவர்களை அந்தபகுதியில் இருந்த போக்குவரத்து காவலர் தடுத்து நிறுத்தியுள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த இரண்டு மாணவர்களும், காவலரை தாக்கியுள்ளனர். அங்கிருந்த ஒருவர் இதனை செல்போனில் படம்பிடித்துள்ளார். இந்த காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளது.

மூலக்கதை