திருப்பதியில் செம்மரம் வெட்டிக் கடத்திய கும்பல் கைது

NEWS 7 TAMIL  NEWS 7 TAMIL
திருப்பதியில் செம்மரம் வெட்டிக் கடத்திய கும்பல் கைது

திருப்பதியில் செம்மரம் வெட்டிக் கடத்திய கும்பலை போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தி பிடித்தனர். 

ஆந்திர மாநிலம் திருப்பதி அருகே உள்ள ஸ்ரீவாரி மெட்டு மலை அடிவாரத்தில் செம்மரக்கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது அந்த வழியாக செம்மரங்களை வெட்டி கடித்த வந்தவர்களை போலீசார் தடுத்து நிறுத்த முயன்றனர். 

ஆனால் கடத்தல்காரர்கள் போலீசாரை நோக்கி கற்களை கொண்டு தாக்குதல் நடத்தினர். இதனால் போலீசார் கடத்தல்காரர்களின் வாகனத்தை நோக்கி துப்பாக்கிச்சூடு நடத்தினர். 

பின்னர் கடத்தலில் ஈடுபட்ட நான்கு பேரையும் கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்து 18 செம்மரக்கட்டைகளை பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்டர்களில் 3 பேர் தமிழகத்தை சேர்ந்தவர்கள் என்று போலீசார் தெரிவித்தனர். 

மூலக்கதை