சட்டப்பேரவை தேர்தலில் மக்கள் நலக் கூட்டணி ஆட்சி மாற்றம் ஏற்படுத்தும்

NEWS 7 TAMIL  NEWS 7 TAMIL
சட்டப்பேரவை தேர்தலில் மக்கள் நலக் கூட்டணி ஆட்சி மாற்றம் ஏற்படுத்தும்

வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் மக்கள் நலக் கூட்டணி ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் என்று கூட்டணித் தலைவர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

மதுரையை அடுத்த ஒத்தக்கடையில், மக்கள் நலக் கூட்டணி சார்பில் மாற்று அரசியல் எழுச்சி மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பொதுச்செயலர் சுதாகர் ரெட்டி, அக்கட்சியின் தேசிய செயலர் டி. ராஜா, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலர் ஜி.ராமகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் முத்தரசன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் ஆகியோர் பங்கேற்றனர். இக்கூட்டத்தில் பேசிய கூட்டணித் தலைவர்கள், திமுக, அதிமுகவுக்கு மாற்றாக மக்கள் நலக்கூட்டணி உருவெடுத்துள்ளதாகக் கூறினர்.

மூலக்கதை