நேதாஜியின் அஸ்தியை மரபணு சோதனைக்கு உட்படுத்த அனிதா போஸ் வலியுறுத்தல்
ஜப்பான் கோவிலில் வைக்கப்பட்டுள்ளது தமது தந்தை நேதாஜி சுபாஸ் சந்திபோஸ் அஸ்தியா என்பதை உறுதிப்படுத்த அதனை மரபணு பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டும் என அவரது மகள் அனிதா போஸ் வலியுறுத்தியுள்ளார்.
தைவானில் 1945ம் ஆண்டு நடைபெற்ற விமான விபத்தில் நேதாஜி மரணம் அடைந்ததாக கூறப்பட்டாலும் அவரது மரணம் குறித்த மர்மம் தற்போது வரை நீடித்து வருகிறது. இந்நிலையில் அவரது மகள் அனிதா போஸ் இது குறித்து பிடிஐ செய்தி நிறுவனத்திற்கு அளித்துள்ள பேட்டியில், தனது தந்தையின் இறப்புக்கு அனேகமாக விமான விபத்து காரணமாக இருக்கலாம் என்று நம்புவதாகத் தெரிவித்துள்ளார்.
நேதாஜியின் அஸ்தி டோக்கியோ நகரில் உள்ள ரெங்கோஜி புத்த கோவிலில் வைக்கப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்படுவதை சுட்டிக்காட்டியுள்ள அனிதா போஸ், அதில் உள்ள எலும்புகள் இன்னும் சேதமடையாத நிலையில்தான் இருக்கிறது என்பதால் அதை மரபணு சோதனைக்கு உட்படுத்த வேண்டும் என தெரிவித்துள்ளார்.
இதன் மூலம் அந்த அஸ்தி தனது தந்தையினுடையதுதானா என்பதை உறுதிப்படுத்த விரும்புவதாகக் அவர் கூறியுள்ளார். அடுத்த மாதம் ஜெர்மனியிலிருந்து இந்தியா வரும் அனிதா போஸ், இதுதொடர்பாக மத்திய அரசிடம் வலியுறுத்துவார் என்று கூறப்படுகிறது.




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
டி20 உலக கோப்பைக்கான தென் ஆப்பிரிக்க அணியில் மாற்றம்
பிக்பாஷ் லீக் தொடரில் இருந்து பாபர் அசாம் விலகல்
2026 டி20 உலகக்கோப்பை தொடர் குறித்து ரோகித் சர்மா நெகிழ்ச்சி பேட்டி
முதல் டி20 போட்டி: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு அதிர்ச்சி அளித்த ஆப்கானிஸ்தான்
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: முதல் சுற்றில் மெத்வதேவ் வெற்றி
