நேதாஜியின் அஸ்தியை மரபணு சோதனைக்கு உட்படுத்த அனிதா போஸ் வலியுறுத்தல்

NEWS 7 TAMIL  NEWS 7 TAMIL
நேதாஜியின் அஸ்தியை மரபணு சோதனைக்கு உட்படுத்த அனிதா போஸ் வலியுறுத்தல்

ஜப்பான் கோவிலில் வைக்கப்பட்டுள்ளது தமது தந்தை நேதாஜி சுபாஸ் சந்திபோஸ் அஸ்தியா என்பதை உறுதிப்படுத்த அதனை மரபணு பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டும் என அவரது மகள் அனிதா போஸ் வலியுறுத்தியுள்ளார்.

தைவானில் 1945ம் ஆண்டு நடைபெற்ற விமான விபத்தில் நேதாஜி மரணம் அடைந்ததாக கூறப்பட்டாலும் அவரது மரணம் குறித்த மர்மம் தற்போது வரை நீடித்து வருகிறது. இந்நிலையில் அவரது மகள் அனிதா போஸ் இது குறித்து பிடிஐ செய்தி நிறுவனத்திற்கு அளித்துள்ள பேட்டியில், தனது தந்தையின் இறப்புக்கு அனேகமாக விமான விபத்து காரணமாக இருக்கலாம் என்று நம்புவதாகத் தெரிவித்துள்ளார்.  

நேதாஜியின் அஸ்தி டோக்கியோ நகரில் உள்ள ரெங்கோஜி புத்த கோவிலில் வைக்கப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்படுவதை சுட்டிக்காட்டியுள்ள அனிதா போஸ்,  அதில் உள்ள எலும்புகள் இன்னும் சேதமடையாத நிலையில்தான் இருக்கிறது என்பதால் அதை மரபணு சோதனைக்கு உட்படுத்த வேண்டும் என தெரிவித்துள்ளார்.
 
இதன் மூலம் அந்த அஸ்தி தனது தந்தையினுடையதுதானா என்பதை உறுதிப்படுத்த விரும்புவதாகக் அவர் கூறியுள்ளார். அடுத்த மாதம் ஜெர்மனியிலிருந்து இந்தியா வரும் அனிதா போஸ், இதுதொடர்பாக மத்திய அரசிடம் வலியுறுத்துவார் என்று கூறப்படுகிறது. 
 

மூலக்கதை