அருணாச்சல பிரதேசத்தில் குடியரசு தலைவர் ஆட்சிக்கு எதிர்ப்பு
அருணாச்சல பிரதேச மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்தியது குடியரசுத் தினத்தில் நிகழ்த்தப்பட்ட ஜனநாயகப் படுகொலை என எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன. இது தொடர்பாக மத்திய அமைச்சரவையில் எடுக்கப்பட்ட முடிவை எதிர்த்து காங்கிரஸ் தொடர்ந்த வழக்கு விசாரணை உச்ச நீதிமன்றத்தில் இன்று நடைபெறுகிறது.
அருணாசலபிரதேச மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சி நடந்து வந்த நிலையில் முதலமைச்சர் நபம் துகியின் நடவடிக்கையில் அதிருப்தி அடைந்த காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் 21 பேர் தனி அணியாக செயல்பட தொடங்கினர். பின்னர் அவர்கள் பா.ஜ.க மற்றும் சுயேச்சை எம்.எல்.ஏ.க்களின் உதவியுடன் நபம் துகியை முதலமைச்சர் பதவியில் இருந்து நீக்குவதாகவும் அறிவித்தனர்.
இதனால் அருணாசலபிரதேசத்தில் அரசியல் நெருக்கடியும், குழப்பமும் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து அருணாசல பிரதேசத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சியை பரிந்துரை செய்வது என மத்திய அமைச்சரவை முடிவெடுத்தது. இதற்கு குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி உடனடியாக ஒப்புதல் அளிக்கவில்லை. தனக்கு உடன்பாடு இல்லாததால் உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை அழைத்து இது குறித்து விளக்கம் கேட்ட பிரணாப் முகர்ஜி, அமைச்சரின் விளக்கத்திற்கு பின்னர் நேற்று மத்திய அரசின் பரிந்துரையில் கையெழுத்திட்டார்.
இதையடுத்து குடியரசு தினமான நேற்று அருணாச்சல பிரதேசத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமலுக்கு வந்தது. இது குடியரசு தினத்தில் நிகழ்த்தப்பட்ட ஜனநாயக படுகொலை என காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன.




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
டி20 உலக கோப்பைக்கான தென் ஆப்பிரிக்க அணியில் மாற்றம்
பிக்பாஷ் லீக் தொடரில் இருந்து பாபர் அசாம் விலகல்
2026 டி20 உலகக்கோப்பை தொடர் குறித்து ரோகித் சர்மா நெகிழ்ச்சி பேட்டி
முதல் டி20 போட்டி: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு அதிர்ச்சி அளித்த ஆப்கானிஸ்தான்
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: முதல் சுற்றில் மெத்வதேவ் வெற்றி
