​ஆஸ்திரேலியாவில் உயரமான கட்டடத்திலிருந்து வெளியேறிய புகையால் பரபரப்பு

NEWS 7 TAMIL  NEWS 7 TAMIL
​ஆஸ்திரேலியாவில் உயரமான கட்டடத்திலிருந்து வெளியேறிய புகையால் பரபரப்பு

ஆஸ்திரேலியாவின் சிட்னி நகர மையப்பகுதியில் உள்ள உயரமான கட்டடம் ஒன்றில் பற்றிய தீயிலிருந்து ஏராளமான புகை வெளியேறியதால் பரபரப்பு ஏற்பட்டது.

சிட்னி நகரின் மையப்பகுதியில் உள்ள கட்டடத்தில் இயங்கிவந்த உணவகத்தில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. உணவு தயாரிக்கும் போது எண்ணெயில் தீ பற்றியதே இந்த விபத்துக்குக் காரணம் எனக்கூறப்படுகிறது. 

தீயை அணைக்க உணவகத்தில் பணியாற்றியவர்கள் முயற்சி மேற்கொண்டும் பயன் இன்றி, தீ வேகமாகப் பற்றி எரிந்தது. இதிலிருந்து வெளியேறிய புகை அப்பகுதிர முழுக்க பரவியதால், அங்கிருந்த மக்கள் பதற்றமடைந்தனர். 

இருப்பினும், தீயணைப்பு வீரர்கள் உடனடியாகச் சம்பவ இடத்திற்கு சென்று தீயை அணைக்க முயன்றனர். இதனால் தீ புகை வெளியேறுவது கட்டுப்படுத்தப்பட்டது. 

மூலக்கதை