​உலக வரலாற்றில் வெப்பம் மிகுந்த ஆண்டாக 2015 அறிவிப்பு

NEWS 7 TAMIL  NEWS 7 TAMIL
​உலக வரலாற்றில் வெப்பம் மிகுந்த ஆண்டாக 2015 அறிவிப்பு

உலகில் இதுவரை பதிவான வெப்பநிலையில், கடந்த ஆண்டின் வெப்பநிலை தான் மிக அதிகமானது என ஐக்கிய நாடுகள் அமைப்பு அறிவித்துள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் புவியின் வெப்பநிலையில் மாறுதல் ஏற்பட்டு வருவதையடுத்து புவி வெப்பமடைவது குறித்து உலக நாடுகள் அனைத்தும் கவலை தெரிவித்து வருகின்றன. 

இதுவரை உலகில் பதிவான வெப்ப அளவுகள் அனைத்தையும் விட கடந்தாண்டு பதிவான வெப்பநிலை மிகவும் அதிகம் என ஐக்கிய நாடுகள் அமைப்பு அறிவித்துள்ளது. 

அதனால், உலகம் முழுவதும் தொடர்ந்து வறட்சியும், அதிகளவு மழை போன்ற இயற்கைச் சீற்றமும் பாதிப்புக்களை ஏற்படுத்தும் என்றும் இந்த அறிவிப்பில் எச்சரிக்கப்பட்டுள்ளது.

மூலக்கதை