​மலேசிய பிரதமர் மீதான 4,500 கோடி ரூபாய் ஊழல் புகார் கைவிடப்பட்டது

NEWS 7 TAMIL  NEWS 7 TAMIL
​மலேசிய பிரதமர் மீதான 4,500 கோடி ரூபாய் ஊழல் புகார் கைவிடப்பட்டது

மலேசிய பிரதமர் Najib Razak மீதான ஊழல் புகார்கள் கைவிடப்படுவதாக தலைமை வழக்கறிஞர் அறிவித்துள்ளார்.

மலேசிய பிரதமர் Najib Razak, 1MDB என்ற அரசு முதலீட்டு நிதியத்தில் 4,500 கோடி ரூபாய் ஊழல் புரிந்துள்ளதாக Wall Street Journal என்ற அமெரிக்க பத்திரிகை வெளியிட்ட செய்தியின் அடிப்படையில் அவர் மீது நடவடிக்கை எடுக்க முடிவு செய்யப்பட்டது. 

ஆனால் ஊழல் புரிந்ததாக கூறப்படும் தொகை, சவுதி அரேபிய மன்னரால் தனக்கு பரிசாக அளிக்கப்பட்டதாகவும், அந்தத் தொகை தவறுதலாக அரசுக் கணக்கில் வரவு வைக்கப்பட்டுப் பின்னர் சொந்தக் கணக்கிற்கு மாற்றப்பட்டதாகவும் பிரதமர் Najib Razak விசாரணையின் போது தெரிவித்தார். 

இது தொடர்பாக சவுதி அரேபிய மன்னரிடம் தொடர்புகொண்டு விசாரித்த போது, தான் அந்தத் தொகையை பரிசாக மலேசிய பிரதமருக்கு அளித்ததாகத் தெரிவித்தார். இதையடுத்து, பிரதமர் Najib Razak மீதான குற்றச்சாட்டுக்கள் கைவிடப்படுவதாக தலைமை வழக்கறிஞர் அறிவித்துள்ளார்.

மூலக்கதை