​குடியரசு தினவிழாவையொட்டி வாகா எல்லையில் நடைபெற்ற கொடி இறக்கும் நிகழ்வு

NEWS 7 TAMIL  NEWS 7 TAMIL
​குடியரசு தினவிழாவையொட்டி வாகா எல்லையில் நடைபெற்ற கொடி இறக்கும் நிகழ்வு

குடியரசுத் தினவிழாவையொட்டி, இந்தியா-பாகிஸ்தான் எல்லையான வாகாவில், கொடி இறக்கும் நிகழ்வில் இருநாட்டு வீரர்களும் கம்பீர நடைபோட்ட காட்சி பார்வையாளர்களை கவர்ந்தது.

பஞ்சாப் மாநிலம் வாகா எல்லையில் நடைபெற்ற இந்த நிகழ்வின் போது, இந்தியா-பாகிஸ்தான் ராணுவத்தினர், இருநாட்டு தேசியக் கொடிகளை ஒன்று போல் கீழிறக்கினர். பின்னர் இருநாட்டு ராணுவத்தினரும் கம்பீர நடைபோட்டபடி ஒருவருக்கொருவர் கை குலுக்கிக் கொண்டனர். இதனை அங்கு கூடியிருந்த பொதுமக்கள் உற்சாகத்துடன் கண்டுகளித்தனர்.

குடியரசுத் தினவிழாவையொட்டி, இந்திய-பாகிஸ்தான் எல்லையான வாகாவில் நடத்தப்பட்ட கண்கவர் கலாச்சார நடன நிகழ்ச்சி பார்வையாளர்கள் வெகுவாகக் கவர்ந்தது. 

பஞ்சாப் மாநிலம் வாகா எல்லைப்பகுதியில், குடியரசுத் தின விழா கொண்டாட்டங்கள் கோலாகலமாக நடைபெற்றன. அப்போது விதவிதமான உடைகளில் வலம் வந்த நடனக்கலைஞர்கள் பாரம்பரிய நடனமாடி பார்வையாளர்களை கவர்ந்தனர்.

மூலக்கதை