தடையை மீறி கோவிலுக்குள் நுழைய முயன்ற பெண்களை தடுத்து நிறுத்திய போலீசார்
மகாராஷ்டிராவில், தடையை மீறி கோவிலுக்குள் நுழைய முயன்ற பெண்களை போலீசார் தடுத்து நிறுத்தியதால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
மகாராஷ்டிரா மாநிலம் அகமத்நகர் மாவட்டத்தில் உள்ள சனிபகவான் கோவிலுக்குள் பெண்கள் நுழைய தடை விதிக்கப்பட்ட நிலையில்,இன்று கோவிலுக்குள் நுழைய போவதாக பெண்கள் அமைப்பு ஒன்று அறிவித்தது.
இதையடுத்து, மாவட்ட நிர்வாகம் கோயிலுக்கு செல்லும் அனைத்து வழிகளையும் மூடி 'சீல்' வைத்தது. ஆயிரக்கணக்கான போலீசார் குவிக்கப்பட்டனர். இந்நிலையில் சுமார் 500-க்கும் மேற்பட்ட பெண்கள், இன்று தடையை மீறி கோவிலுக்குள் நுழைய முயன்றனர்.
பேருந்தில் புறப்பட்ட அவர்களை கோயிலிலிருந்து சுமார் 70 கிலோ மீட்டர் முன்பாக போலீசார் தடுத்து நிறுத்தினர். இதனால், போலீசாருக்கும், பெண்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
ஆத்திரமடைந்த பெண்கள் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். கோவிலுக்குள் அனுமதிக்கும் வரை இந்த இடத்தை விட்டு நகரப் போவதில்லை என்றும் அவர்கள் முழக்கமிட்டனர். பின்னர், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் அனைவரையும் போலீசார் கைது செய்தனர்.




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
டி20 உலக கோப்பைக்கான தென் ஆப்பிரிக்க அணியில் மாற்றம்
பிக்பாஷ் லீக் தொடரில் இருந்து பாபர் அசாம் விலகல்
2026 டி20 உலகக்கோப்பை தொடர் குறித்து ரோகித் சர்மா நெகிழ்ச்சி பேட்டி
முதல் டி20 போட்டி: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு அதிர்ச்சி அளித்த ஆப்கானிஸ்தான்
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: முதல் சுற்றில் மெத்வதேவ் வெற்றி
