​தடையை மீறி கோவிலுக்குள் நுழைய முயன்ற பெண்களை தடுத்து நிறுத்திய போலீசார்

NEWS 7 TAMIL  NEWS 7 TAMIL
​தடையை மீறி கோவிலுக்குள் நுழைய முயன்ற பெண்களை தடுத்து நிறுத்திய போலீசார்

மகாராஷ்டிராவில், தடையை மீறி கோவிலுக்குள் நுழைய முயன்ற பெண்களை போலீசார் தடுத்து நிறுத்தியதால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. 

மகாராஷ்டிரா மாநிலம் அகமத்நகர் மாவட்டத்தில் உள்ள சனிபகவான் கோவிலுக்குள் பெண்கள் நுழைய தடை விதிக்கப்பட்ட நிலையில்,இன்று கோவிலுக்குள் நுழைய போவதாக பெண்கள் அமைப்பு ஒன்று அறிவித்தது. 

இதையடுத்து, மாவட்ட நிர்வாகம் கோயிலுக்கு செல்லும் அனைத்து வழிகளையும் மூடி 'சீல்' வைத்தது.  ஆயிரக்கணக்கான போலீசார் குவிக்கப்பட்டனர். இந்நிலையில் சுமார் 500-க்கும் மேற்பட்ட பெண்கள், இன்று தடையை மீறி கோவிலுக்குள் நுழைய முயன்றனர். 

பேருந்தில் புறப்பட்ட அவர்களை கோயிலிலிருந்து சுமார் 70 கிலோ மீட்டர் முன்பாக போலீசார் தடுத்து நிறுத்தினர். இதனால், போலீசாருக்கும், பெண்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. 

ஆத்திரமடைந்த பெண்கள் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். கோவிலுக்குள் அனுமதிக்கும் வரை இந்த இடத்தை விட்டு நகரப் போவதில்லை என்றும் அவர்கள் முழக்கமிட்டனர். பின்னர், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் அனைவரையும் போலீசார் கைது செய்தனர்.

மூலக்கதை