​மது வருவாயை இழக்க அதிமுக தயாராக இல்லை: கனிமொழி குற்றச்சாட்டு

NEWS 7 TAMIL  NEWS 7 TAMIL
​மது வருவாயை இழக்க அதிமுக தயாராக இல்லை: கனிமொழி குற்றச்சாட்டு

மது விற்பனையால் கிடைக்கும் 30 ஆயிரம் கோடி ரூபாயை இழக்க அதிமுக அரசு தயாராக இல்லை என்று திமுக எம்.பி. கனிமொழி குற்றம்சாட்டியுள்ளார்.

தூத்துக்குடியில் நடைபெற்ற திமுக மகளிர் அணி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் திமுக எம்.பி.கனிமொழி கலந்து கொண்டு உரையாற்றினார். 

அப்போது மதுவால் அரசுக்கு லாபமாக அல்லது அவர்களது மது நிறுவனங்களுக்கு லாபமா என்று கேள்வி எழுப்பினார். மக்கள் நலனில் அரசு அக்கறையுடன் நடந்து கொள்ள வேண்டும் என்று கூறிய அவர், திமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால், கருணாநிதி நிச்சயம் மதுவிலக்கை கொண்டுவருவார் என்று நம்பிக்கை தெரிவித்தார். முன்னதாக திருச்செந்தூரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சித்த மருத்துவக் கல்லூரி மாணவிகள் மரணம் தொடர்பாக நீதி விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தினார்.

மூலக்கதை