​அரசு பள்ளி முதல் ஆஸ்கர் விருது வரை... கோவையை சேர்ந்தவர் சாதனை

NEWS 7 TAMIL  NEWS 7 TAMIL
​அரசு பள்ளி முதல் ஆஸ்கர் விருது வரை... கோவையை சேர்ந்தவர் சாதனை

கோவை கள்ளப்பாளையம் கிராம அரசு பள்ளியில் பயின்ற கோட்டலங்கோ லியோன் திரைப்பட தொழில்நுட்பத்துக்கான ஆஸ்கர் விருதை வென்று பெருமை சேர்த்துள்ளார். 

ஆண்டுதோறும் சினிமா துறைக்கான சிறந்த தொழில்நுட்பங்களுக்கும் ஆஸ்கார் விருது  வழங்கப்படுகிறது. நடப்பாண்டில், இந்தியாவைச் சேர்ந்த ராகுல் தாக்கர் மற்றும் கோட்டலாங்கோ லியோன் ஆகியோருக்கு, ஆஸ்கார் தொழில்நுட்ப விருது, வரும் பிப்., 13ம் தேதி வழங்கப்படவுள்ளது. 

அவர்களில் கோட்டலாங்கோ லியோன் கோவையைச் சேர்ந்தவர். கோவை கள்ளப்பாளையத்தில் பள்ளி படிப்பை முடித்த அவர், பி.எஸ்.ஜி., தொழில்நுட்பக் கல்லுாரியில் 1992ம் ஆண்டு கம்ப்யூட்டர் சயின்ஸ் படிப்பில் பொறியியல் பட்டம் பெற்றார். 

பின், டெல்லி தனியார் நிறுவனத்தில் இரண்டாண்டுகள் பணியாற்றிவிட்டு, அமெரிக்காவிலுள்ள அரிசோனா பல்கலையில் கடந்த 1996ம் ஆண்டு முதுகலை பொறியியலில் பட்டம் பெற்றுள்ளார். அவருக்கு திரைப்படங்களிலும், அதன் தொழில்நுட்பங்களிலும் ஏற்பட்ட ஆர்வத்தால், அதன் பல்வேறு தொழில்நுட்பங்களைக் கற்றுள்ளார். 

அமெரிக்காவில், 'சோனி இமேஜ் ஒர்க்ஸ்' நிறுவனத்தில், முதுநிலை மென்பொறியாளராக, 20 ஆண்டுகளாக பணியாற்றி வரும் கோட்டலாங்கோ லியோன், மனைவி ரூபா மற்றும் மகள் ஸ்ருதியுடன், அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் வசிக்கிறார். 

தன் மகனின் இந்த சாதனை உச்சகட்ட சந்தோஷத்தையும், பெருமையும் தருவதாக அவரது தாய் ராஜம்மா தெரிவித்துள்ளார். .

லியோன் பணியாற்றிய முதல் திரைப்படம் ஸ்டூவர்ட் லிட்டில். அதைத்தொடர்ந்து, ஸ்பைடர் மேன், மென் இன் பிளாக், ஓட்டல் டிரான்ஸ்ல்வேனியா, தி ஸ்மர்ப்ஸ், கிளவுடி வித் தி சான்ஸ் ஆப் மீட்பால்ஸ் உள்ளிட்ட புகழ்பெற்ற திரைப்படங்களில் பணியாற்றியுள்ளார். 

1996ம் ஆண்டு துவங்கப்பட்ட ஐடிவியூ கண்டுபிடிப்பு திட்டத்தில், திரைப்படக் கலைஞர்களுடன் இணைந்து பணியாற்றிய கோட்டலங்கோ, இரு மாதங்களுக்குள் இந்த மென்பொருளின் முதல் பதிப்பை வெளியிட்டு சாதனை படைத்துள்ளார்.

 

ஆஸ்கர் விருது பெறும் கோவைக்காரர்

அரசு பள்ளி முதல் ஆஸ்கர் விருது வரை... கோவையை சேர்ந்த கோட்டலங்கோ லியோனுக்கு திரைப்பட தொழில்நுட்பத்துக்கான ஆஸ்கர் விருதுகள்ளப்பாளையம் அரசு பள்ளியில் படித்த லியோன், தற்போது அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்சில் மென்பொறியாளராக பணியாற்றுகிறார்.ஸ்டூவர்ட் லிட்டில், ஸ்பைடர் மேன், மென் இன் பிளாக், ஓட்டல் டிரான்ஸ்ல்வேனியா, தி ஸ்மர்ப்ஸ் உள்ளிட்ட புகழ்பெற்ற திரைப்படங்களிலும் பணியாற்றியுள்ளார்ஊடகங்கள் அதிகம் பேசாத லியோனின் சாதனையை, அவரது உறவினர்களுடன் பகிர்ந்துக்கொள்கிறது நியூஸ்7 தமிழ்..மேலும் படிக்கhttp://goo.gl/LFlXOB

Posted by News7Tamil on Tuesday, January 26, 2016

மூலக்கதை