கேரள காவல்துறையிடமிருந்து மாவோயிஸ்டு ஒருவர் தப்பி ஓட்டம்

NEWS 7 TAMIL  NEWS 7 TAMIL
கேரள காவல்துறையிடமிருந்து மாவோயிஸ்டு ஒருவர் தப்பி ஓட்டம்

கேரள காவல்துறையிடம் இருந்த மாவோயிஸ்டு ஒருவர் தப்பிச் சென்றதை அடுத்து தமிழக எல்லையில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. 

கேரள மாநிலம் அட்டபாடி காவல்நிலையத்தில் இருந்து நேற்று மாலை மாவோயிஸ்டுகள் அமைப்பை சேர்ந்த சோமன் என்பவர் தப்பிச் சென்றதாக கூறப்படுகிறது. 

இதனையடுத்து தப்பிச் சென்ற மாவோயிஸ்ட் தமிழகத்தில் ஊடுருவாமல் இருக்க தமிழக - கேரள எல்லையான மஞ்சூர், கிண்ணக்கோரை உள்ளிட்ட எல்லையோரப் பகுதிகளில் கண்காணிப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. 

நீலகிரி மாவட்டம் கூடலூர், பந்தலூர் சோதனைச்சாவடிகளிலும் கூடுதல் கண்காணிப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மேலும் கேரள போலீசாருடன் மாவோயிஸ்டுகள் நடமாட்டம் குறித்து கண்காணித்து வருவதாக தமிழக போலீசார் தெரிவித்துள்ளனர். 

மூலக்கதை