இந்தியாவில் ஆப்பிள் நிறுவனம் செய்த புதிய சாதனை

NEWS 7 TAMIL  NEWS 7 TAMIL
இந்தியாவில் ஆப்பிள் நிறுவனம் செய்த புதிய சாதனை

இந்தியாவில் கடந்த 3 மாதங்களில் சுமார் 8 லட்சம் ஆப்பிள் மொபைல் தயாரிப்புகள் விற்பனையாகி, புதிய சாதனை படைக்கப்பட்டுள்ளதாக, அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

Counterpoint Research and Cybex என்ற நிறுவனம் வெளியிட்டுள்ள புள்ளி விவரப்படி, கடந்த அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான காலாண்டில், 8 லட்சத்திற்கும் மேற்பட்ட ஆப்பிள் நிறுவன தயாரிப்புகள் விற்பனையாகியுள்ளன. இதற்கு முன்பு அதிகபட்ச காலாண்டு விற்பனையாக 5 லட்சம் தயாரிப்புகளே விற்பனையானதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. 

விநியோகஸ்தர்களின் எண்ணிக்கையை அதிகரித்தது, பொருட்கள் மீதான தள்ளுபடி, குறைபாடுள்ள பொருட்களை திரும்பப் பெறுவது, பொருட்களுக்கான விலையை தவணை முறையில் செலுத்துவது ஆகிய நடவடிக்கைகளில் ஆப்பிள் நிறுவனம் ஈடுபட்டதே அந்நிறுவன தயாரிப்புகளின் விற்பனை உயர்வுக்குக் காரணம் என Counterpoint Research and Cybex குறிப்பிட்டுள்ளது. 

குறிப்பாக, ஆப்பிள் நிறுவன செல்போன்களில் iPhone 5s, 6s, 6s Plus ஆகியவற்றின் விற்பனை மொத்த விற்பனையில் 30 சதவீதத்தை கொண்டுள்ளதாகவும் Counterpoint Research and Cybex நிறுவனம் தெரிவித்துள்ளது. 

மூலக்கதை