​ரிசர்வ் வங்கி அச்சடித்த 1000 ரூபாய் நோட்டுகளில் பிழை

NEWS 7 TAMIL  NEWS 7 TAMIL
​ரிசர்வ் வங்கி அச்சடித்த 1000 ரூபாய் நோட்டுகளில் பிழை

பாதுகாப்பு குறைபாடுகளுடன் ஆயிரம் ரூபாய் நோட்டை ரிசர்வ் வங்கி அச்சடித்து வெளியிட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

கள்ள நோட்டு புழக்கத்தை தடுக்க ரிசர்வ் வங்கி கூடுதல் பாதுகாப்பு அம்சங்களுடன் ரூபாய் நோட்டுகளை வெளியிட்டு வருகிறது.

அதன்படி, ரூபாய் நோட்டுக்களில்  வெள்ளி நிறத்தில் பாதுகாப்பு இழை இருக்கும். ஆனால், சமீபத்தில் இந்திய ரூபாய் நோட்டு அச்சகத்தில் அச்சிடப்பட்ட ரூ.1,000 நோட்டில் இந்த பாதுகாப்பு இழை இல்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது. 

அதாவது, 5ஏஜி, 3ஏபி வரிசை எண்ணில் அச்சிடப்பட்ட ரூ.1,000 நோட்டில் வெள்ளி இழை இடம்பெறவில்லை என கூறப்படுகிறது. ஆனால் இவை புழக்கத்தில் உள்ளதா என்ற தகவல் வெளியாகவில்லை. இருப்பினும், ரூ.30 ஆயிரம் கோடி மதிப்பிலான ரூ.1,000 நோட்டு இவ்வாறு தவறுதலாக அச்சிடப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இது தொடர்பாக கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 14ம் தேதி ரூபாய் நோட்டு அச்சக தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் கையெழுத்திட்டு அனுப்பிய கடிதத்தில், பாதுகாப்பு அம்சம் இல்லாத ரூபாய் நோட்டு அச்சிடப்பட்ட தகவல் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன்படி, எல் எழுத்துடன் 5ஏஜி, 3ஏபி வரிசை எண் கொண்ட சில ரூ.1,000 நோட்டில் பாதுகாப்பு இழை இல்லை என்றும், இவற்றில் புழக்கத்தில் உள்ள நோட்டை திரும்ப பெற வேண்டும் என ரிசர்வ் வங்கி அவசர அறிவிப்பு வெளியிட்டுள்ளது. பொதுமக்கள் இந்த வரிசை எண் நோட்டு இருந்தால் வங்கிகளில் மாற்றிக்கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூலக்கதை