ஐஎஸ் தீவிரவாதிகளுக்கான சம்பளம் பாதியாக குறைப்பு
நிதி நெருக்கடியில் சிக்கித்தவிக்கும் ஐஎஸ் தீவிரவாத அமைப்பு தனது போராளிகளுக்கு வழங்கப்படும் சம்பளத்தில் பாதியளவு குறைத்துள்ளது.
சர்வதேச அளவில் மிகவும் கொடூரமான தாக்குதல்களை புரிந்து வரும் ஐஎஸ் தீவிரவாத அமைப்பு, ஈரான் மற்றும் சிரியாவின் சில பகுதிகளை உள்ளடக்கிய ஓர் இஸ்லாமிய ஆட்சியை உருவாக்க வேண்டும் என்ற நோக்கத்தில் இயங்கி வருகிறது.
தங்களுக்கு எதிராக போர் தொடுக்கும் நாடுகளில் பெரும் அச்சுறுத்தல்களை உருவாக்கி வரும் ஐஎஸ் அமைப்பு பல்வேறு நாடுகளில் காலூன்றவும் முயற்சி செய்து வருகிறது.
இந்நிலையில் சிரியாவில், ஐ.எஸ். ஆதிக்கத்தில் உள்ள எண்ணெய் வயல்கள், கருவூலம் ஆகியவற்றின் மீது அமெரிக்க கூட்டுப்படைகள் வான் வழித் தாக்குதல்கள் நடத்தியதை அடுத்து, அதன் வருவாய் கடுமையாக பாதிப்படைந்துள்ளது.
இதைத் தொடர்ந்து ஐஎஸ் அமைப்பு தன் போராளிகளுக்கு வழங்கி வந்த சம்பளத்தை பாதியாக குறைத்துவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால், நிதி நெருக்கடி எதனால் ஏற்பட்டுள்ளது என்பதை அந்த அமைப்பு தெளிவாக தெரிவிக்கவில்லை.
ஐஎஸ் தீவரவாதிகள் சம்பளமாக இந்திய மதிப்பில் சுமார் 30 ஆயிரம் முதல் 85 ஆயிரம் வரை பெறுகின்றனர்.
அதாவது உள்நாட்டை சேர்ந்த தீவிரவாதிகள் சுமார் 30 ஆயிரம் சம்பளம் பெற்று வந்துள்ளனர்.
ஆனால், வெளிநாடுகளில் இருந்து ஐஎஸ் அமைப்பில் சேர்ந்தவர்களுக்கு சம்பளம் இரு மடங்காக வழங்கப்பட்டு வருகிறது.
அதேசமயம், தீவிரவாதிகளின் மனைவிகளுக்கு கூடுதலாக ரூ.3500-ம், குழந்தைகளுக்கு ரூ.2000-ம் வழங்கப்படுகிறது.
தற்போது சம்பளம் பாதியாகப்பட்டுள்ளதால், ரூ.15 ஆயிரம் வரை மட்டும் தீவிரவாதிகள் பெற வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
ஆனால், மாதமிருமுறை வழங்கப்படும் மளிகை பொருட்கள் வழக்கம் போல் வழங்கப்படும் என்று ஐஎஸ் அமைப்பு தெரிவித்துள்ளது.




காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
டி20 உலக கோப்பைக்கான தென் ஆப்பிரிக்க அணியில் மாற்றம்
பிக்பாஷ் லீக் தொடரில் இருந்து பாபர் அசாம் விலகல்
2026 டி20 உலகக்கோப்பை தொடர் குறித்து ரோகித் சர்மா நெகிழ்ச்சி பேட்டி
முதல் டி20 போட்டி: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு அதிர்ச்சி அளித்த ஆப்கானிஸ்தான்
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: முதல் சுற்றில் மெத்வதேவ் வெற்றி
