உக்ரைனில் வீசிய பனிப்புயலில் சிக்கி இருவர் பலி, விமான சேவை பாதிப்பு

NEWS 7 TAMIL  NEWS 7 TAMIL
உக்ரைனில் வீசிய பனிப்புயலில் சிக்கி இருவர் பலி, விமான சேவை பாதிப்பு

உக்ரைன் நாட்டின் துறைமுக நகரமான ஒடேசாவில் வீசிய பனிப்புயலில் சிக்கி இருவர் உயிரிழந்தனர். துருக்கியில் நிலவும் பனிப்பொழிவால் விமான சேவை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

உக்ரைன் பகுதியில் கடும் பனி நிலவி வரும் நிலையில், துறைமுக நகரமான ஒடேசாவில் பனிப்புயல் வீசியது. -7 டிகிரி குளிர் நிலவியதால், வீடில்லாமல் சாலையில் வசித்தவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். அவர்களில் இருவர் பனியில் சிக்கி உயிரிழந்தனர். பலர் ஆபத்தான நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். 

அதனால், வீடில்லாதவர்களுக்கு அரசு சார்பில் கூடாரங்கள் வழங்கப்பட்டுள்ளன. சாலைகளில் இரண்டடி உயரத்திற்கு பனி படர்ந்துள்ளதால், விமானப் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. இந்நிலையில் பொடெம்கின் சதுக்க உறைபனியில் பலர் உற்சாகமாக பனிச்சறுக்கு விளையாட்டில் ஈடுபட்டனர்.

துருக்கியின் இஸ்தான்புல் நகரிலும் கடும் பனிப்பொழிவால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. 500க்கும் மேற்பட்ட விமானங்களின் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. அங்குள்ள Ataturk விமான நிலையத்தில் 387 விமானங்களும், Sabina Gokcen விமானநிலையத்தில் 52 விமானங்களும் சேவையை ரத்து செய்துள்ளன. இதனால் பயணிகள் விமான நிலையத்திலேயே தங்கியுள்ளனர். 

இதன் காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்கு காலவரையற்ற விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. விமான நிலையங்களில் விமானங்களைச் சுற்றி பனிப்பொழிவு சூழ்ந்துள்ளதால் விமானங்களை இயக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. 

மூலக்கதை