28 மாதங்களில் இல்லாத அளவுக்கு இந்திய ரூபாயின் மதிப்பு சரிவு

NEWS 7 TAMIL  NEWS 7 TAMIL
28 மாதங்களில் இல்லாத அளவுக்கு இந்திய ரூபாயின் மதிப்பு சரிவு

இந்திய ரூபாயின் மதிப்பு கடந்த 28 மாதங்களில் இல்லாத அளவுக்கு கடுமையாக சரிந்துள்ளது.

இன்றைய வர்த்தகநேர துவக்கத்தில், அந்நிய செலாவணி சந்தையில் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 30 காசுகள் சரிந்து, 67 ரூபாய் 95 காசாக இருந்தது.

பங்குச்சந்தைகளில் காணப்படும் சரிவு, வங்கிகள் மற்றும் இறக்குமதியாளர்களுக்கு டாலரின் தேவை அதிகரித்து இருப்பது போன்ற காரணங்களால் ரூபாயின் மதிப்பு சரிந்துள்ளது.

முன்னதாக நேற்று ரூபாயின் மதிப்பு 3 காசுகள் உயர்ந்து 67 ரூபாய் 65 காசாக இருந்தது.

மூலக்கதை