பாகிஸ்தானில் பல்கலைக்கழகத்துக்குள் நுழைந்த தீவிரவாதி துப்பாக்கிச்சூடு: 21பேர் பலி

NEWS 7 TAMIL  NEWS 7 TAMIL

பாகிஸ்தானில் பெஷாவர் நகருக்கு அருகேயுள்ள பல்கலைக்கழகத்தில் நுழைந்த தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 21 பேர் உயிரிழந்தனர். நான்கு தீவிரவாதிகளும் கொல்லப்பட்டதாக ராணுவம் அறிவித்துள்ளது.

வடமேற்கு பாகிஸ்தானில் உள்ள Charsadda நகரப் பல்கலைக்கழகத்தை வெடிவைத்துத் தகர்க்க முயன்ற தீவிரவாதிகள் பச்சா கான் பல்கலைக் கழகத்திற்குள் நுழைந்து கண்மூடித்தனமாகத் தாக்குதல் நடத்தத் தொடங்கினர்.

இதையடுத்து போலீசார் மற்றும் ராணுவத்தினர் உடனடியாக பல்கலைக் கழகத்தைச் சுற்றிவளைத்து தீவிரவாதிகளுக்குப் பதிலடிகொடுக்கத் தொடங்கினர். பல்கலைக் கழகத்தில் படித்து வந்த மாணவர்கள் உள்பட 21 பேர் பலியானதாகவும், 4 தீவிரவாதிகள் கொல்லப்பட்டுள்ளதாகவும் தற்போதைய செய்திகள் தெரிவிக்கின்றன.

பெஷாவர் ராணுவப் பள்ளியில் கடந்த ஆண்டு தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 130-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பலியாயினர் என்பது குறிப்பிடத்தக்கது. 

மூலக்கதை