பாகிஸ்தானில் பல்கலைக்கழகத்துக்குள் நுழைந்த தீவிரவாதி துப்பாக்கிச்சூடு: 20பேர் பலி

NEWS 7 TAMIL  NEWS 7 TAMIL
பாகிஸ்தானில் பல்கலைக்கழகத்துக்குள் நுழைந்த தீவிரவாதி துப்பாக்கிச்சூடு: 20பேர் பலி

பாகிஸ்தானில் பெஷாவர் நகருக்கு அருகேயுள்ள பல்கலைக்கழகத்தில் நுழைந்த தீவிரவாதிகளுடன் பாதுகாப்புப் படையினர் நடத்தி வரும் துப்பாக்கிச் சண்டையில் 20 பேர் உயிரிழந்திருப்பதாக தகவல்கள் கூறுகின்றன. 

வடமேற்கு பாகிஸ்தானில் உள்ள சார்சட்டா (Charsadda) நகரப் பல்கலைக்கழகத்தை வெடிவைத்துத் தகர்க்க முயன்ற தீவிரவாதிகள் பச்சா கான் பல்கலைக் கழகத்திற்குள் நுழைந்ததையடுத்து, மாணவர்கள் மற்றும் பணியாளர்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டு வருகின்றனர். 

பல்கலைக் கழக வளாகத்தினுள் தொடர்ந்து வெடிச்சத்தம் கேட்டு வருவதாக அப்பகுதியில் உள்ளவர்கள் தெரிவித்துள்ளனர். துப்பாக்கிச்சண்டையில் இரண்டு தீவிரவாதிகளும் சுட்டுக்கொல்லப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

பெஷாவர் ராணுவப் பள்ளியில் கடந்த ஆண்டு தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 130-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பலியாயினர் என்பது குறிப்பிடத்தக்கது.

மூலக்கதை