​மாற்றுப் பாதையில் சேது சமுத்திர திட்டம்: நிதின் கட்கரி தகவல்

NEWS 7 TAMIL  NEWS 7 TAMIL
​மாற்றுப் பாதையில் சேது சமுத்திர திட்டம்: நிதின் கட்கரி தகவல்

சேது சமுத்திர திட்டத்தை மாற்றுப் பாதையில் செயல்படுத்துவது குறித்து ஆய்வு செய்து, திட்டம் நிறைவேற்றப்படும் என்று மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.

சென்னை காமராஜர் அரங்கில், இந்திய கடல்சார் பல்கலைக்கழகத்தின் இரண்டாம் ஆண்டு பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இதில் மத்திய அமைச்சர்கள் நிதின் கட்கரி, பொன்.ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். விழாவில் 366 பேருக்கு பட்டங்கள் வழங்கப்பட்டன. விழாவில் பேசிய மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, தமிழகத்தில் குளச்சல், மேற்கு வங்கத்தின் சாகர், மகாராஷ்டிராவில் வாத்வா உள்ளிட்ட புதிய துறைமுகங்கள் உருவாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார். 

சேது சமுத்திர திட்டத்தை மாற்றுப் பாதையில் செயல்படுத்துவது குறித்து ஆய்வு செய்து, திட்டம் நிறைவேற்றப்படும் என்றும் அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். மேலும் மதுரவாயல், எண்ணூர் பறக்கும் சாலையை விரைந்து முடிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். 

மூலக்கதை