மிஸ்டு கால் மூலம் ஃபெடரல் வங்கியில் பணப் பரிமாற்றம்
மிஸ்டு கால் மூலமாக பணப் பரிமாற்றம் செய்யும் சேவையை ஃபெடரல் வங்கி அறிமுகம் செய்துள்ளது.
இது தொடர்பாக அந்த வங்கி வெளியிட்டுள்ள தகவலில், வாடிக்கையாளர்களுக்கு டிஜிட்டல் தொழில்நுட்ப வங்கிச் சேவைகளை வழங்குவதில் ஃபெடரல் வங்கி தொடர்ந்து புதுமைகளைப் புகுத்தி வருவதாக தெரிவித்துள்ளது.
இந்தியாவில் முதன் முறையாக மிஸ்டு கால் வாயிலான பணப் பரிமாற்ற சேவைகளை ஃபெடரல் வங்கி அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாகவும், இதன் மூலம் வங்கியின் வாடிக்கையாளர்கள் பதிவு செய்யப்பட்ட தங்கள் செல்பேசியிலிருந்து ஒரு மிஸ்டு கால் கொடுப்பதன் மூலம் வேண்டிய நபர்களுக்கு பணப் பரிமாற்றம் செய்து கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வசதியினைப் பெற வாடிக்கையாளர்கள் தங்களது செல்பேசியில் இருந்து எஸ்எம்எஸ் மூலம் ஒருமுறை பதிவு செய்ய வேண்டும்.
அதன்படி, 9895088888 என்ற எண்ணுக்கு ACTMFT < இடைவெளி>பெறுநர் செல்பேசி எண்<இடைவெளி> பெறுநர் வங்கி எண்<இடைவெளி>IFSC எண் <இடைவெளி>தொகை<இடைவெளி>அனுப்புநரின் வங்கி எண்ணில் கடைசி 3 எண்<இடைவெளி>பெறுநர் பெயர் என்று டைப் செய்து குறுஞ்செய்தி அனுப்ப வேண்டும்.
இதன் மூலம், பதிவு செய்யப்படும்.
பிறகு, பணம் பெறுநர் 7812900900 என்ற எண்ணுக்கு மிஸ்டு கால் கொடுத்தால் அனுப்பப்பட்ட தொகை, வங்கி கணக்கில் செலுத்தப்படும்.
இந்த சேவை மூலம் ஒரு நாளை 5 ஆயிரம் வரை அனுப்பலாம். ஆனால், ஒரு மாதத்திற்கு 25 ஆயிரம் வரை மட்டுமே அனுப்ப முடியும்.




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
