​ திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத் தேர்தலில் இயக்குனர் விக்ரமன் அணி வெற்றி

NEWS 7 TAMIL  NEWS 7 TAMIL
​ திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத் தேர்தலில் இயக்குனர் விக்ரமன் அணி வெற்றி

திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத் தேர்தலில் இயக்குனர் விக்ரமன் அணி 292 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்,

தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத் தேர்தல் இன்று சென்னையில் நடைபெற்றது. இதில் இயக்குனர் மற்றும் எழுத்தாளர் விக்ரமன் சார்பில் புது வசந்தம் அணியும், எழுத்தாளர் மோகன் காந்தி ராமன் தலைமையிலான எழுத்தாளர்கள் அணியும் மோதின. 

தேர்தல் காலை 9 மணிக்கு தொடங்கி மாலை 4 மணி வரை நடைபெற்றது. இதில் இயக்குனர் விக்ரமன் அணி 292 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. 

தலைவராக விக்ரமனும், செயலாளராக பிறைசூடனும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். துணைத் தலைவராக யார் கண்ணனும், பஞ்சு அருணாச்சலமும் தேர்வாகியுள்ளனர். பொருளாளர் பதவிக்கு ஏற்கனவே ரமேஷ் கண்ணா போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

மூலக்கதை