பாகிஸ்தான் தனது மண்ணில் தீவிரவாதத்தை வேரறுக்க வேண்டும் : ஒபாமா

NEWS 7 TAMIL  NEWS 7 TAMIL
பாகிஸ்தான் தனது மண்ணில் தீவிரவாதத்தை வேரறுக்க வேண்டும் : ஒபாமா

பாகிஸ்தான் தனது மண்ணில் தீவிரவாதத்தை வேரறுக்க வேண்டும் என அமெரிக்க அதிபர் ஒபாமா தெரிவித்துள்ளார். 

வாஷிங்டனில், பி.டி.ஐ. செய்தி நிறுவனத்துக்கு அவர் அளித்த பேட்டியில்  தீவிரவாதத்தை ஒழிக்க பாகிஸ்தான் கூடுதல் நடவடிக்கையை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொண்ட ஒபாமா, தீவிரவாதிகளின் தொடர்பு வளையத்தை பாகிஸ்தான் அரசு அழிக்க வேண்டும் என்றார். 

பாகிஸ்தானில் செயல்படும் தீவிரவாத இயக்கங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்திய ஒபாமா, பதன்கோட் விமானப்படை தளத்தில் தாக்குதல் நடத்தப்பட்ட விவகாரத்தில் பாகிஸ்தான் உடனான பிரதமர் மோடியின் அணுகுமுறைக்கு பாராட்டு தெரிவித்தார்.  

மூலக்கதை