மெக்சிகோ நாட்டில் ஒரே இரவில் 12 முறை சீறிய எரிமலை

NEWS 7 TAMIL  NEWS 7 TAMIL
மெக்சிகோ நாட்டில் ஒரே இரவில் 12 முறை சீறிய எரிமலை

மெக்சிகோவின் நெருப்பு எரிமலையான கொலிமா மீண்டும் தீ பிளம்புகளையும் சாம்பலையும் அதிக அளவில் வெளியேற்றத் தொடங்கியுள்ளது.

மெக்சிகோவில் உள்ள கொலிமா எரிமலை கடந்த சில நாட்களுக்கு முன் வெடித்த போது ஏராளமான சாம்பல் மற்றும் புகையை சுமார் 3 கிலோ மீட்டர் உயரத்துக்கு வெளியேற்றியது. 

இந்நிலையில், சில நாட்கள் அமைதியாக இருந்த இந்த எரிமலை மீண்டும் வெடித்து சாம்பல் மற்றும் தீ பிளம்புகளை வெளியேற்றியுள்ளது. ஒரே இரவில் மட்டும் 12 முறை இதுபோல் சாம்பலை வெளியேற்றியதாக செய்திகள் வெளியாகியுள்ளன. 

சுமார் 8,000 அடி உயரத்துக்கு இந்த சாம்பல் வெளியேறியதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதேபோல்  மெக்சிகோ நகரின் கிழக்குப் பகுதியில் உள்ள மற்றொரு எரிமலையும் சீறி வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

மூலக்கதை