கலிஃபோர்னியா சிறையிலிருந்து 3 பயங்கர குற்றவாளிகள் தப்பியோட்டம்

NEWS 7 TAMIL  NEWS 7 TAMIL
கலிஃபோர்னியா சிறையிலிருந்து 3 பயங்கர குற்றவாளிகள் தப்பியோட்டம்

அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாநில சிறையிலிருந்து தப்பியோடிய 3 பேரைப் பிடிக்க போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

தப்பியோடிய 3 பேரும் பயங்கர குற்றவாளிகள் என்றும், அவர்களால் சமூக சீர்கேடுகள் ஏற்பட வாய்ப்பிருப்பதாகவும் சிறைத்துறை அதிகாரிகள் அறிவித்துள்ளனர். இதனால் பொதுமக்கள் கவனத்துடன் இருக்குமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

கைதிகள் பற்றிய தகவல்களைப் பரிமாற பொதுமக்களுக்கு ஹாட்லைன் வசதியும் செய்து தரப்பட்டுள்ளது. இந்த 3 கைதிகளும் ஆக்சா பிளேடு மூலம் அறையின் கதவிலிருந்த கம்பிகளை அறுத்துத் துளையிட்டு பின்னர் மேற்கூரை வழியாக தப்பியிருக்கலாம் என போலீசார் தெரிவித்துள்ளனர். சிறை வாளகம் மற்றும் அருகில் உள்ள கட்டடங்களில் தேடியும் அவர்களைப் பிடிக்கமுடியவில்லை. 

மூலக்கதை