​வரி ஏய்ப்பு புகார்: இங்கிலாந்து அரசுக்கு 1,250 கோடி செலுத்த கூகுள் நிறுவனம் உடன்பாடு

NEWS 7 TAMIL  NEWS 7 TAMIL
​வரி ஏய்ப்பு புகார்: இங்கிலாந்து அரசுக்கு 1,250 கோடி செலுத்த கூகுள் நிறுவனம் உடன்பாடு

இங்கிலாந்தில் வரி ஏய்ப்பில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், சுமார் 1,250 கோடி ரூபாய் வரி செலுத்த கூகுள் நிறுவனம் சம்மதித்துள்ளது.

சட்டத்தின் மூலம் அளிக்கப்பட்ட சலுகைகளைத் தவறாகப் பயன்படுத்தி, இங்கிலாந்தில் கூகுள் நிறுவனம் வரி ஏய்ப்பில் ஈடுபட்டதாக புகார்கள் எழுந்தன. 

கூகுள் நிறுவனத்தின் துணை நிறுவனமான ஆல்ஃபபெட் இன்க் அலுவலகத்தை அயர்லாந்தில் திறந்ததன் மூலம் சில சலுகைகளை கூகுள் பெற்றதாக கூறப்படுகிறது. ஆனால், சட்டப்படியே  செயல்படுவதாக தொடர்ந்து கூறிவந்த கூகுள் நிறுவனத்திற்கு எதிராக இங்கிலாந்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் கருத்து தெரிவித்துவந்தனர். 

இதனால், ஆண்டுதோறும் கூகுள் நிறுவனம் ஈட்டிய லாபம் குறித்து கணக்கெடுக்கும் பணிகளை இங்கிலாந்து அரசு மேற்கொண்டது. இந்நிலையில், இது தொடர்பாக இங்கிலாந்து அரசுடன் நடந்த பேச்சுவார்த்தையின் இறுதியில், 1,250 கோடி ரூபாய் செலுத்த கூகுள் நிறுவனம் முன்வந்துள்ளது.

மூலக்கதை