​வேகமாகப் பரவும் ZIKA வைரஸ்: கருத்தரிப்பைத் தவிர்க்குமாறு பெண்களுக்கு எச்சரிக்கை

NEWS 7 TAMIL  NEWS 7 TAMIL
​வேகமாகப் பரவும் ZIKA வைரஸ்: கருத்தரிப்பைத் தவிர்க்குமாறு பெண்களுக்கு எச்சரிக்கை

ZIKA வைரஸ் வேகமாகப் பரவுவதையடுத்து, நான்கு லத்தீன் அமெரிக்க நாடுகளில் பெண்கள் கருத்தரிப்பதைத் தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பிரேசில், கொலம்பியா, எல்-சல்வடார் மற்றும் பொலிவிய நாடுகளில் கொசுக்கள் மூலம் பரவும் ZIKA வைரஸ் வேகமாகப் பரவி வருகிறது. 

இந்த வைரஸ், கருவில் இருக்கும் சிசுவைத் தாக்கி பல்வேறு உடல்நலக்குறைபாடுகளை உருவாக்கும் எனவும், பல சமயங்களில் சரிசெய்யமுடியாத வியாதிகளை ஏற்படுத்திவிடும் எனவும் மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். 

இதனால் இந்த வைரசைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மேலும், இந்த நான்கு நாடுகளில் உள்ள பெண்கள் கருத்தரிப்பதைத் தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். 

விரைவில் இந்த வைரஸ் முழுமையாகக் கட்டுப்படுத்தப்படும் என மருத்துவர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

மூலக்கதை