நடப்பாண்டில் மிகவும் வேகமாக வளரும் நாடாக இந்தியா இருக்கும் : ஐ.நா.

NEWS 7 TAMIL  NEWS 7 TAMIL
நடப்பாண்டில் மிகவும் வேகமாக வளரும் நாடாக இந்தியா இருக்கும் : ஐ.நா.

நடப்பாண்டில் பொருளாதாரத்தில் மிகவும் வேகமாக வளரும் நாடாக இந்தியா இருக்கும் என்று ஐ.நா தெரிவித்துள்ளது.

ஐ.நா.வின் தெற்காசிய நாடுகளுக்கான பொருளாதார அமைப்பு அறிக்கை ஒன்றை நேற்று வெளியிட்டது. 

அதில், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி, 2016-ஆம் ஆண்டில் 7.3 சதவீதமாகவும், 2017-ஆம் ஆண்டில் 7.5 சதவீதமாகவும் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நடப்பாண்டில் உலக அளவில் பொருளாதாரத்தில் மிகவும் வேகமாக வளரும் நாடாக  இந்தியா இருக்கும் என்றும் அந்த அமைப்பு குறிப்பிட்டுள்ளது.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய், உலோகங்கள் ஆகியவற்றின் விலை குறைந்ததால், இந்தியாவில் பொருளாதாரச் சூழல் மேம்பட்டுள்ளதாகவும், அடுத்த இரண்டு ஆண்டுகளில் தெற்கு ஆசியாவில் உள்ள பெரும்பாலான நாடுகளின் பொருளாதாரம் மிகவும் வேகமாக வளரும் என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூலக்கதை