​நாட்டில் பதற்றத்துடன் வாழ வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக கரண் ஜோகர் வேதனை

NEWS 7 TAMIL  NEWS 7 TAMIL
​நாட்டில் பதற்றத்துடன் வாழ வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக கரண் ஜோகர் வேதனை

நாட்டில் பதற்றத்துடன் வாழ வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக பாலிவுட் இயக்குநர் கரண் ஜோகர் வேதனை.

தற்போதைய சூழலில் நாட்டில் கலைஞர்களின் கரங்கள் கட்டப்பட்டுள்ளதாக பிரபல பாலிவுட் இயக்குநர் கரண் ஜோகர் தெரிவித்துள்ளார். 

சகிப்பின்மை:

நாட்டில் சகிப்பின்மை குறித்து பாலிவுட் பிரபலங்கள் தொடர்ந்து கருத்து தெரிவித்து வருகின்றனர். ஆமிர்கான், ஏ.ஆர். ரகுமான் வரிசையில் தற்போது பிரபல பாலிவுட் இயக்குநர் கரண் ஜோகரும் சகிப்பின்மை குறித்து கருத்து தெரிவித்துள்ளார். 

ஜெய்ப்பூரில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், இந்நாட்டில் ஜனநாயகம் உள்ளதா? என கேள்வி எழுப்பினார். ஒரு வித பதற்றத்தோடு வாழ வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்த அவர், தனிப்பட்ட வாழ்க்கை குறித்து பேச முடியாத ஒரு நாட்டில் வாழ்ந்து வருவதாகவும் கரண் ஜோகர் குறிப்பிட்டார். தற்போதைய சூழலில் நாட்டில் கலைஞர்களின் கரங்கள் கட்டப்பட்டுள்ளதாகவும் கரண் ஜோகர் வேதனை தெரிவித்தார்.

காங்கிரஸ் வரவேற்பு: 

கரண் ஜோகரின் கருத்துக்கு காங்கிரஸ் வரவேற்பு தெரிவித்துள்ளது. அனுபம் கெர் தவிர மற்ற கலைஞர்கள் அனைவரும் ஒரே நிலைப்பாட்டில் பேசுவதாக காங்கிரஸ் மூத்த தலைவர் மணீஷ் திவாரி தெரிவித்துள்ளார் 

மூலக்கதை