​வாஷிங்டன் உள்பட 6 மாநிலங்களில் பனிப்புயல் எச்சரிக்கையால் அவசரநிலை பிரகடனம்

NEWS 7 TAMIL  NEWS 7 TAMIL
​வாஷிங்டன் உள்பட 6 மாநிலங்களில் பனிப்புயல் எச்சரிக்கையால் அவசரநிலை பிரகடனம்

அமெரிக்காவில் வாஷிங்டன் உள்பட 6 மாநிலங்களில் கடும் பனிப்புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் வாஷிங்டன் மற்றும் கிழக்குக் கடற்கரையை ஒட்டிய மாநிலங்களான டென்னெஸ்ஸீ, வடக்கு கரோலினா, விர்ஜீனியா, மேரிலாந்து உள்பட 7 மாநிலங்களில் வரலாறு காணாக பனிப்புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

புயல் தாக்கத் தொடங்கி, நாளை இரவு வலுவடையும் என அந்நாட்டு வானிலை முன்னறிவிப்பு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. ஏற்கனவே அதிகரித்து வரும் பனிப்பொழிவின் காரணமாக பல்வேறு பகுதிகளில் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ள நிலையில் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

மூலக்கதை