வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சிறு வணிகர்களுக்கு கடன் வழங்கும் திட்டம் தொடக்கம்

NEWS 7 TAMIL  NEWS 7 TAMIL
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சிறு வணிகர்களுக்கு கடன் வழங்கும் திட்டம் தொடக்கம்

மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சிறு வணிகர்களுக்கான அம்மா சிறு வணிகக்கடன் உதவித் திட்டத்தை தமிழக முதல்வர் ஜெயலலிதா தொடங்கி வைத்தார். 

மிகச்சிறிய முதலீட்டில் அன்றாடம் பூக்கள், பழங்கள், காய்கறிகள் போன்ற பொருட்களை வாங்கி விற்பனை செய்து வரும் சிறுவணிகர்கள், பெட்டிக்கடை நடத்துவோர்கள், முதலீட்டை இழந்து வாழ்வாதாரத்திற்காக தனியாரிடம் அதிக கடன் பெறும் நிலையை தவிர்க்க இந்த திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. 

இத்திட்டத்தின் வாயிலாக கூட்டுறவு வங்கிகள் மூலம் 5 ஆயிரம் வரை வட்டியில்லா கடன் வழங்கப்படும் எனவும், வட்டியான 11 சதவிகிதத்தை தமிழ்நாடு அரசு வழங்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்தக் கடனை 25 வாரங்களில் வாரந்தோறும் 200 ரூபாய் என்ற அடிப்படையில் திருப்பிச்செலுத்த வேண்டும் எனவும், குறித்த காலத்தில் கடனை திரும்ப செலுத்துபவர்களுக்கு மீண்டும் அதே அளவு கடன் தொகையை குறைந்த வட்டியான 4 சதவீதத்தில் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மூலக்கதை