​இயற்கை விவசாயத்தை மேம்படுத்த வேண்டும்: மோடி வலியுறுத்தல்

NEWS 7 TAMIL  NEWS 7 TAMIL
​இயற்கை விவசாயத்தை மேம்படுத்த வேண்டும்: மோடி வலியுறுத்தல்

நாடு முழுவதும் இயற்கை விவசாயம் மேம்படுத்தப்பட வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தியுள்ளார். 

சிக்கிம் மாநிலம் கேங்டாக்கில் நடைபெற்ற தேசிய விவசாய மாநாட்டில் பேசிய அவர், விவசாய உற்பத்திப் பொருட்களுக்கு நல்ல விலை கிடைப்பதற்கு இது அவசியம் எனக் கூறினார். மேலும், விவசாயிகளின் மேம்பாட்டுக்கு ஏற்ற மொபைல் ஃபோன் ஆப்ஸ்களை உருவாக்க வேண்டும் என கேட்டுக்கொண்ட பிரதமர், இணைய வழியில் விளை பொருட்களை விற்பனை செய்வதும் மேம்படுத்தப்பட வேண்டும் என குறிப்பிட்டார்.

இயற்கை விவசாயத்தை மேற்கொள்வதில் தேசிய அளவில் மட்டுமல்லாது, சர்வதேச அளவிலும் சிக்கிம் முன்னோடியாக விளங்கும் என பிரதமர் நம்பிக்கை தெரிவித்தார். 

மூலக்கதை