சென்னையில் மொத்த வியாபாரத்தில் ஈடுபட்ட பூ கடைகளுக்கு சீல் வைப்பு

NEWS 7 TAMIL  NEWS 7 TAMIL
சென்னையில் மொத்த வியாபாரத்தில் ஈடுபட்ட பூ கடைகளுக்கு சீல் வைப்பு

சென்னை பாரிமுனையில் மொத்த வியாபாரத்தில் ஈடுபட்ட பூக்கடைகளுக்கு உயர் நீதிமன்ற ஆணைக்கிணங்க சென்னை பெருநகர வளர்ச்சி கழக அதிகாரிகள் சீல் வைத்தனர். 

சென்னை பாரிமுனையில் உள்ள பூக்கடைகள், கோயம்பேடு மார்கெட்டுக்கு மாற்றப்பட்டன. அதன் பின்னரும் பூக்கள் மொத்த வியாபாரம் செய்யப்படுவதாகவும், இதனால் தங்களுடைய வியாபாரம் பாதிக்கப்படுவதாகவும் கோயம்பேடு பூக்கடை உரிமையாளர்கள் வழக்கு தொடுத்தனர். 

இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், பாரிமுனையில் மொத்த வியாபாரத்தில் ஈடுபடும் பூக்கடைகளுக்கு சீல் வைக்க உத்தரவிட்டது. இதனையடுத்து, காவல்துறையினரின் பாதுகாப்புடன், பூ மொத்த வியாபாரத்தில் ஈடுபட்ட கடைகளுக்கு சி.எம்.டி.ஏ அதிகாரிகள் சீல் வைத்தனர். 

அதிகாரிகளின் இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள பூ வியாபாரிகள், மொத்த வியாபாரத்தில் தாங்கள் ஈடுபடவில்லை என கூறியுள்ளனர்.

மூலக்கதை