காற்று மாசுபாட்டை கட்டுப்படுத்த புதிய திட்டம்: பழைய வாகனங்களுக்கு வரிச்சலுகை

NEWS 7 TAMIL  NEWS 7 TAMIL
காற்று மாசுபாட்டை கட்டுப்படுத்த புதிய திட்டம்: பழைய வாகனங்களுக்கு வரிச்சலுகை

காற்று மாசுபாட்டை தடுக்கும் வகையில்  பழைய வாகனங்களை விற்று புதிய வாகனங்களை வாங்குவோருக்கு 1.5 லட்சம் ரூபாய் வரை வரிச் சலுகை கிடைக்கச் செய்யும் திட்டத்தை மத்திய அரசு அறிமுகப்படுத்தப்பட உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது.

சூற்று சூழலை பாதிப்படையச் செய்வதில் காற்று மாசுபாட்டிற்கு முக்கிய பங்கு உள்ளது. காற்று மாசுபாட்டால் சுவாச நோய், இதய நோய்க்கு ஆளாகி உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில்  காற்று மாசு தொடர்பான நோய்களுக்கு செலவிடப்படும் தொகை, மொத்த உள்நாட்டு உற்பத்தியில், 3 சதவீதமாக உள்ளதாகப் புள்ளி விபரங்கள் கூறுகின்றன. 

இந்நிலையில் காற்று மாசுபாட்டை கட்டுப்படுத்த பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. 10 ஆண்டுகளுக்கு மேல் பயன்படுத்தப்பட்ட, பழைய காரை விற்று, புதிய கார் வாங்குவோருக்கு, 30,000 ரூபாய் வரையும், லாரி போன்ற கனரக வாகனங்களை விற்று புதிய வாகனத்தை வாங்குவோருக்கு வரிச் சலுகைகளுடன் சேர்த்து, அதிகபட்சமாக, ஒன்றரை லட்ச ரூபாய் வரையும், விலையில் தள்ளுபடி அளிக்கும் திட்டத்தை ஆலோசித்து வருகிறது. 

இது தொடர்பாக மத்திய சாலை போக்குவரத்துறை அமைச்சர் நிதின்கட்காரி அளித்துள்ள பரிந்துரையின் சாதக, பாதக அம்சங்களை ஆராய்ந்து, அதன் அடிப்படையில், மத்திய பட்ஜெட்டில் அறிவிப்புகள் வெளியாகலாம் எனக் கூறப்படுகிறது.

மூலக்கதை