​சரத்குமார், ராதாரவி உள்ளிட்டோர் மீது பொருளாதார குற்றப்பிரிவில் புகார்

NEWS 7 TAMIL  NEWS 7 TAMIL
​சரத்குமார், ராதாரவி உள்ளிட்டோர் மீது பொருளாதார குற்றப்பிரிவில் புகார்

நடிகர் சரத்குமார், ராதாரவி உள்ளிட்ட முன்னாள் நடிகர் சங்க நிர்வாகிகள் மீது பொருளாதார குற்றப்பிரிவு காவல்துறையில் புகார் அளிக்கப்படும் என நடிகர் சங்கத் தலைவர் நாசர் தெரிவித்துள்ளார்.

சென்னை தி.நகரில் நடிகர் சங்கத்தின் 4-வது செயற்குழு கூட்டம் நடைபெற்றது. 

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சங்கத்தின் தலைவர் நாசர், முன்னாள் நடிகர் சங்க நிர்வாகிகள் சரத்குமார், பொதுச்செயலாளர் ராதாரவி, பொருளாளர் உள்ளிட்டோர் வரவு செலவு கணக்குகளை முறையாக தாக்கல் செய்யாததால், அவர்கள் மீது பொருளாதார குற்றப்பிரிவு காவல்துறையிடம் புகார் அளிக்கப்படும் என தெரிவித்தார்.

முன்னாள் நிர்வாகிகளுக்கு 3 மாத காலம் அவகாசம் அளிக்கப்பட்டும், முறையாக கணக்கு தாக்கல் செய்யவில்லை என குற்றம்சாட்டிய நடிகர் கார்த்தி, வரும் மார்ச் மாதம் பொதுக்குழு கூட்டம் நடைபெறும் எனவும் தெரிவித்தார்.

மூலக்கதை