​தொடங்கிடு இந்தியா, விழித்திடு இந்தியா திட்டம் தொடக்கம்

NEWS 7 TAMIL  NEWS 7 TAMIL
​தொடங்கிடு இந்தியா, விழித்திடு இந்தியா திட்டம் தொடக்கம்

தொடங்கிடு இந்தியா, விழித்திடு இந்தியா திட்டத்தினை, பிரதமர்  நரேந்திர மோடி டெல்லியில் இன்று தொடங்கி வைத்தார்.

டெல்லி விஞ்யான் பவனில் நடைபெற்ற விழாவில், இத்திட்டத்திற்கான மலரை பிரதமர் மோடி வெளியிட்டார். விழாவில் பேசிய அவர், இந்த திட்டம் இளைஞர்களின் சக்தியை பன்மடங்காக்கும் திட்டம் என்றார்.

மத்திய அரசு புது,புது முயற்சிகளை ஊக்குவிக்கும் பல திட்டங்களை செயல்படுத்தி வருவதாக குறிப்பிட்ட பிரதமர், தொடங்கிடு இந்தியா, விழித்திடு இந்தியா திட்டம் நமது வாழ்கையை மாற்றும் திட்டமாக இருக்கும் என்று நம்பிக்கை தெரிவித்தார். 

வேலை தேடும் மனநிலையில் இருந்து, வேலை வாய்ப்பை உருவாக்குபவர்கள் என்ற மனமாற்றத்தை, இளைஞர்கள் மத்தியில் கொண்டு வர வேண்டும் எனவும் பிரதமர் வலியுறுத்தினார்.

மூலக்கதை