ஜல்லிக்கட்டுக்கு எதிரான கருத்து: நடிகர் தனுஷ் விளக்கம்

NEWS 7 TAMIL  NEWS 7 TAMIL
ஜல்லிக்கட்டுக்கு எதிரான கருத்து: நடிகர் தனுஷ் விளக்கம்

ஜல்லிக்கட்டு தொடர்பாக சமூக வலைதளங்களில் தனது பெயரில் வெளியான கருத்துகள் உண்மையல்ல என்று நடிகர் தனுஷ் விளக்கம் அளித்துள்ளார். 

இது தொடர்பாக, ட்விட்டர் பக்கத்தில் தனுஷ் வெளியிட்டுள்ள பதிவில்,சமூக வலைதளங்களில் தனது பெயரில் வெளியான கருத்துகள் உண்மையல்ல என்று மறுப்பு தெரிவித்துள்ளார். 

மேலும்  ஜல்லிக்கட்டுக்கு எதிரான கருத்தை தாம் எப்போதும் தெரிவிக்கவில்லை என்றும், தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டுக்கு எப்போதும் ஆதரவு தெரிவிக்கும் மனநிலையிலேயே உள்ளதாகவும் அவர் கருத்து பதிந்துள்ளார். 

அத்துடன் பீட்டா அமைப்பின் விளம்பர தூதராக தாம் இருந்ததில்லை என்றும் ட்விட்டர் பக்கத்தில் நடிகர் தனுஷ் தெரிவித்துள்ளார்.

மூலக்கதை