ஹாரிபாட்டர் படத்தின் பிரபல நட்சத்திரம் ஆலன் ரிக்மேன் காலமானார்

NEWS 7 TAMIL  NEWS 7 TAMIL
ஹாரிபாட்டர் படத்தின் பிரபல நட்சத்திரம் ஆலன் ரிக்மேன் காலமானார்

ஹாரிபாட்டர் படத்தில் ஸ்னேப் ஆக நடித்த ஆலன் ரிக்மேன் காலமானார். புற்றுநோயால் அவதிப்பட்டு வந்த ஆலன் ரிக்மேன் தனது 69-வது வயதில் உயிரிழந்தார் என்பதை அவரது உறவினர்கள் உறுதிப்படித்தியுள்ளனர்.

லண்டனில் பிறந்த ஆலன் ரிக்மேன் தனது நடிப்பு பயணத்தை நாடகத்திலே தொடங்கினார். இவர் பெரும்பாலான படங்களில் வில்லனாகவே நடித்துள்ளார். தனது குறலால் ரசிகர்களை நாயகனைவிட தன்வசம் அதிகமாக ஈர்த்துள்ளார்.

Truly, Madly, Deeply என்ற படத்தில் இவரது பாசிடிவ் ரோல் மக்களிடையே வரவேற்பை பெற்றது. ஹாரிபாட்டார் படத்தில் ஸ்னேப் ஆக இவரது நடிப்பு அதீத வரவேற்பை பெற்றது. மேலும், குறுந்தொடரின் சிறந்த நடிகருக்கான கோல்டன் குளோப் விருதையும் இவர் பெற்றுள்ளார்.

இவரின் மறைவிற்கு ஹாலிவுட் நட்சத்திரங்கள் பலரும் இரங்கல் தெரிவித்தனர். இவரது மறைவு, பெரும் அதிர்ச்சியை தந்ததாகவும், அவர் ஒரு சிறந்த நடிகர் மட்டுமல்லாமல் ஒரு நல்ல மனிதர் என்றும்
ஹாரிபாட்டர் நுாலாசிரியை ஜே கே ரவ்லிங் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

மூலக்கதை