​ஏடிஎம்க்கள் மூலமாக கடன் பெறும் திட்டத்தை அறிமுகப்படுத்த ரிசர்வ் வங்கி முடிவு

NEWS 7 TAMIL  NEWS 7 TAMIL
​ஏடிஎம்க்கள் மூலமாக கடன் பெறும் திட்டத்தை அறிமுகப்படுத்த ரிசர்வ் வங்கி முடிவு

ஏடிஎம்க்கள் மூலமாகவே கடன் பெறும் திட்டத்தை செயல்படுத்த ரிசர்வ் வங்கி முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

ஏடிஎம்., மையங்களை வங்கி கிளைகளாக செயல்பட வைப்பது தொடர்பாக பல தனியார் வங்கிகள் ஏற்கனவே அளித்த கோரிக்கையின் அடிப்படையில் இந்த முடிவை ரிசர்வ் வங்கி மேற்கொண்டுள்ளதாக தெரிகிறது. 

இந்த திட்டத்தின் மூலம் வாடிக்கையாளர்கள் ஏடிஎம்., மையங்களிலேயே வங்கி கடன், இன்சூரன்ஸ், கிரெடிட் கார்டுகள் ஆகியவற்றிற்கு விண்ணப்பித்து, ஏடிஎம் மூலமே அவற்றை பெற்றுக் கொள்ளும் வசதி செய்யப்பட உள்ளது. 

ஆனால் இந்த வகை ஏடிஎம்-கள் மூலம் பண பரிவர்த்தனை ஏதும் செய்ய முடியாது என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

மூலக்கதை