பெட்ரோல், டீசல் விலை குறைப்பு நள்ளிரவு முதல் அமல்

NEWS 7 TAMIL  NEWS 7 TAMIL

பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் குறைத்துள்ளன. இந்த விலை குறைப்பு  நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய்யின் விலை 12 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு கடும் சரிவை சந்தித்துள்ளது. இதன் எதிரொலியாக எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் விலையை குறைத்துள்ளன. அதன்படி, பெட்ரோல் விலை லிட்டருக்கு 32 காசுகளும், டீசல் விலை லிட்டருக்கு 85 காசுகளும் குறைக்கப்பட்டுள்ளன. 

இந்த விலை குறைப்பு நேற்று நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது. விலைக்குறைப்பை அடுத்து, சென்னையில் 1 லிட்டர் பெட்ரோல் விலை 59 ரூபாய் 45 காசுகளுக்கும், 1 லிட்டர் டீசல் 44 ரூபாய் 51 காசுகளாகவும் இருக்கும்.

மூலக்கதை