9 ஆண்டுகளுக்கு முன் உரைய வைத்த கருமுட்டை மூலம் பிறந்த பெண் குழந்தை

NEWS 7 TAMIL  NEWS 7 TAMIL
9 ஆண்டுகளுக்கு முன் உரைய வைத்த கருமுட்டை மூலம் பிறந்த பெண் குழந்தை

முன்னாள் உலக அழகியான டயானா ஹைடன் 9 ஆண்டுகளுக்கு முன் உறைய வைத்து பாதுகாக்கப்பட்ட தனது கருமுட்டை மூலம் பெண் குழந்தை ஒன்றை பெற்றுள்ளார்.  

இந்திய அழகியாக தேர்ந்தெடுக்கப்பட்டு பின்னர் கடந்த 1997ம் ஆண்டு உலக அழகியாக பட்டம் சூட்டப்பட்ட டயானா ஹைடன் பிரபல மாடலாகவும் இந்தி திரையுலக நடிகையாகவும் வலம் வந்தார். இதனால் தனது திருமணத்தை தள்ளிப்போட்ட ஹைடன் வயதான காலத்தில் குழந்தை பிறப்பில் சிக்கல் ஏற்படக் கூடாது என்பதற்காக 9 ஆண்டுகளுக்கு முன் தனது 32 வயதில் மும்பை சந்தாகுரூசில் உள்ள மருத்துவமனையில் தனது கருமுட்டைகளை உறை நிலையில் பாதுகாத்து வைத்தார்.  

கருவியல் நிபுணர் டாக்டர் நந்திதா யால்சேட்கர் உதவியுடன் 16 முட்டைகளை உறையவைத்து பாதுகாப்பாக வைத்து இருந்தார். இந்த நிலையில் அவர் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக்காவை சேர்ந்த கொலின் டிக் என்பவரை காதலித்து  திருமணம் செய்து கொண்டார். அதன் பிறகு டயானா ஹைடன் என்டோ மெட்டிராசிஸ் என்ற நோயால் பாதிக்கப்பட குழந்தைப்பேறுக்கான வாய்ப்பு குறைந்தது.  

எனவே, டயானா தான் ஏற்கனவே 9 ஆண்டுகளாக உறைய வைத்து பாதுகாத்து வரும் கரு முட்டைகளை கொண்டு செயற்கை முறையில் குழந்தை பெற திட்டமிட்டார். பின்னர் மும்பையை சேர்ந்த மருத்துவர்கள் அளித்த சிகிச்சையால் செயற்கை கருத்தரிப்பு அடைந்த டயானா ஹைடனுக்கு அழகான பெண் குழந்தை பிறந்துள்ளது. அதற்கு ஆர்யா ஹைடன் என பெயர் சூட்டியுள்ளார். 

மூலக்கதை