ஆப்பிள் இறக்குமதி தொடர்பாக மத்திய அரசின் அறிவிப்பானைக்கு இடைக்கால தடை

NEWS 7 TAMIL  NEWS 7 TAMIL
ஆப்பிள் இறக்குமதி தொடர்பாக மத்திய அரசின் அறிவிப்பானைக்கு இடைக்கால தடை

ஆப்பிள் இறக்குமதி தொடர்பாக மத்திய அரசின் அறிவிப்பானைக்கு சென்னை உயர் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. 

மகாராஷ்டிர மாநிலத்திலுள்ள நவசேவா துறைமுகத்தில் மட்டும் தான் ஆப்பிள்கள் இறக்குமதி செய்யப்பட வேண்டும் என கடந்த செப்டம்பரில் அயல் வர்த்தக இயக்குனர் ஜெனரல் சார்பில் அறிவிப்பானை வெளியிட்டிருந்தது. 

தங்களின் வியாபாரத்தை முடக்கும் இந்த அறிவிப்பானையை ரத்து செய்ய கோரி முத்ரா ஏற்றுமதி நிறுவனம் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எம்.எம்.சுரேஷ், மத்திய அரசின் அறிவிப்பானைக்கு இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டார். 

இது தொடர்பாக இரண்டு வாரத்திற்குள் பதில் அளிகுமாறு அயல் வர்த்தக இயக்குனர் ஜெனரலுக்கு நீதிபதி உத்தரவிட்டார். 

மூலக்கதை