​மேகி நூடுல்சை மீண்டும் ஆய்வக சோதனைக்கு உட்படுத்த உச்சநீதிமன்றம் உத்தரவு

NEWS 7 TAMIL  NEWS 7 TAMIL
​மேகி நூடுல்சை மீண்டும் ஆய்வக சோதனைக்கு உட்படுத்த உச்சநீதிமன்றம் உத்தரவு

மேகி நூடுல்சை மீண்டும் ஆய்வக சோதனைக்கு உட்படுத்த உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேகி நூடுல்சில் நிர்ணயிக்கப்பட்ட அளவை விட காரீயம் மற்றும் மோனோசோடியம் குளுடமேட் வேதிப்பொருள் அதிகளவில் இருப்பதாக புகார் எழுந்தது. இதனை அடுத்து, பல்வேறு மாநிலங்களில் மேகி நூடுல்ஸ் விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டது. 

இது தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நடைபெற்றுவரும் நிலையில், இவ்வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மைசூரில் உள்ள ஆய்வகத்தில், மேகி நூடுல்சை மீண்டும் சோதனைக்கு உட்படுத்த நீதிபதிகள் உத்தரவிட்டனர். 

8 வாரங்களில் ஆய்வக அறிக்கையை மத்திய அரசு சமர்ப்பிக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் தங்களது உத்தரவில் குறிப்பிட்டனர்.

மூலக்கதை