இன்றுடன் விடைப்பெறும் "பிரேமம்": ரசிகர்கள் கவலை

NEWS 7 TAMIL  NEWS 7 TAMIL
இன்றுடன் விடைப்பெறும் பிரேமம்: ரசிகர்கள் கவலை

2015ல் வெளியான மலையாள திரைப்படமான "பிரேமம்" சென்னையில் 220 நாட்களுக்கு மேலாக ஓடி மெகா ஹிட் ஆகியுள்ளது. இந்நிலையில், இன்று மாலை கடைசி காட்சி திரையிடப்படுவதால், திரையரங்கம் ஹவுஸ்புல் ஆகி உள்ளது.

நிவின் பாலி, சாய் பல்லவி நடித்த இப்படத்தை 'நேரம்' பட இயக்குநர் 'அல்போன்ஸ் புத்திரன்' இயக்கியுள்ளார். இந்த படம் மலையாளத்தில் மட்டுமின்றி தமிழகத்திலும் மாபெரும் வெற்றி பெற்றது. மேலும் தெலுங்கில் இப்படத்தை ரீமேக் செய்துவருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சென்னையில் சத்தியம் திரையரங்கில், கடந்த 200 நாட்களுக்கும் மேல் ஓடி சாதனை படைத்திருக்கும் ப்ரேமம் திரைப்படம் இன்று மாலை கடைசி காட்சி திரையிடப்படுகிறது. 

பெரும்பாலான வெற்றி திரைப்படங்கள் 25 நாட்கள் மட்டுமே ஓடும் சூழ்நிலையில், 200 நாட்களுக்கு மேல் ஓடி ரசிகர்களை கவர்ந்துள்ளது இந்த திரைப்படம். இன்றோடு காட்சிகள் நிறுத்தப்படுவதால், ரசிகர்கள் திரையரங்கை ஹவுஸ்புல் ஆக்கியுள்ளனர்.

மூலக்கதை