எழுதப்பட்டிருக்கும் ரூபாய் நோட்டுகள் செல்லாது என்பது வதந்தி: ரிசர்வ் வங்கி

NEWS 7 TAMIL  NEWS 7 TAMIL
எழுதப்பட்டிருக்கும் ரூபாய் நோட்டுகள் செல்லாது என்பது வதந்தி: ரிசர்வ் வங்கி

ரூபாய் நோட்டுகளில் எழுதப்பட்டிருந்தால் அவை செல்லாது என வெளியாகி வரும் தகவல்களை ரிசர்வ் வங்கி மறுத்துள்ளது.

இது தொடர்பாக ரிசர்வ் வங்கி கவர்னர் ரகுராம் ராஜன் வெளியிட்டுள்ள அறிக்கையில் ரூபாய் நோட்டுகளில் சொற்களோ, எழுத்துக்களோ எழுதப்பட்டிருந்தால் அடுத்த ஆண்டு முதல் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது என வாட்ஸ் அப்பில் வெளிவரும் தகவல் முற்றிலும் தவறானது என குறிப்பிட்டிருந்தார்.  

மேலும் ரூபாய் நோட்டுகள் கிழிந்திருந்தால் அவற்றை பெற்றுக்கொண்டு புதிய ரூபாய் நோட்டுகளை வழங்குவதை, ரிசர்வ் வங்கி தனது கொள்கையாக கொண்டுள்ளதாகவும் ரகுராம் ராஜன் தெரிவித்துள்ளார். 

இது தொடர்பாக ரிசர்வ் வங்கி வெளியிட்ட அறிக்கையிலும், எழுதப்பட்ட ரூபாய் நோட்டுகளை 2016ஆம் ஆண்டு முதல் ஏற்க வேண்டாம் என்று வங்கிகளுக்கு எந்த உத்தரவையும் பிறப்பிக்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூலக்கதை