பீப் பாடலுக்கு தென்னிந்திய நடிகர் சங்கம் கண்டனம்

NEWS 7 TAMIL  NEWS 7 TAMIL
பீப் பாடலுக்கு தென்னிந்திய நடிகர் சங்கம் கண்டனம்

சிம்பு எழுதிப் பாடியதாக வெளியாகியிருக்கும் பீப் பாடல் பெண்களை இழிவுபடுத்தும் வகையில் இருப்பதாக தென்னிந்திய நடிகர் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது. 

இதுதொடர்பாக நடிகர் சங்கத்தின் தலைவர் நாசர் வெளியிட்டுள்ள அறிக்கையில், அனிரூத் இசையமைத்து சிம்பு எழுதி பாடியதாக அண்மையில் வெளியாகி இருக்கும் பாடலில், பீப் செய்யப்பட்டு கேட்பவர்களின் யூகத்திற்கு வெளியிடப்பட்ட வார்த்தைகள் மிக கொச்சையான உணர்வையும், பெண்களை இழிவுபடுத்தியும்  இருப்பதால், அது கண்டனத்திற்கு உரியது என்றும் கண்டித்தக்கது என்றும் தெரிவித்துள்ளார்.

ஒரு கலைஞனின் கருத்து, மக்களிடையே எதிர்மறையான விமர்சனங்களை ஏற்படுத்தும் போது, சம்பந்தப்பட்ட கலைஞர்கள், மக்களின் உணர்வை மதித்து வருத்தமோ, மன்னிப்போ கேட்டு தன்னிலை விளக்கம் அளிக்க வேண்டும் என்றும், இதற்காக அந்தக் கலைஞர்களுக்கு கால அவகாசம் கொடுத்து இப்பிரச்னையில் எந்த கருத்தும் தென்னிந்திய நடிகர் சங்கம் தெரிவிக்காமல் இருந்தது என்றும் நாசர் குறிப்பிட்டுள்ளார்.

ஆனால், இந்த விவகாரம் மக்கள் மன்றத்தை தாண்டி, நீதிமன்றத்தை சென்றடைந்துள்ள நிலையில், இந்த நிகழ்வு சம்பந்தப்பட்ட கலைஞர்களுக்கு மட்டுமல்ல, அனைத்து கலைஞர்களுக்கும் இது படிப்பினையாக அமைந்து விட்டதாகவும் நாசர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மூலக்கதை