பெட்ரோல், டீசல் விலை குறைப்பு: நள்ளிரவு முதல் புதிய விலை அமல்

NEWS 7 TAMIL  NEWS 7 TAMIL
பெட்ரோல், டீசல் விலை குறைப்பு: நள்ளிரவு முதல் புதிய விலை அமல்

பெட்ரோல் விலை லிட்டருக்கு 50 பைசாவும், டீசல் விலை லிட்டருக்கு 46 பைசாவும் குறைக்கப்பட்டுள்ளன. 

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்து வருவதை அடுத்து, இந்த விலைக்குறைப்பை எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன. விலை குறைப்பு இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வருகிறது. 

அதன்படி, சென்னையில் இனி ஒரு லிட்டர் பெட்ரோல் 60 ரூபாய் 28 காசுகளுக்கு விற்பனையாகும். டீசல் விலை ஒரு லிட்டர் 47 ரூபாய் 28 காசுகளுக்கு விற்பனையாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதேபோல், டெல்லியில் ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை 59 ரூபாய் 98 காசுகளுக்கும், மும்பையில் ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை 67 ரூபாய் 04 காசுகளுக்கும் விற்பனையாகும். கொல்கத்தாவில் ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை 65 ரூபாய் 53 காசுகளுக்கு விற்பனையாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது 

மூலக்கதை